ஐபோன்களுக்கான கேமரா தயாரிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகப்பா தொழில் குழுமத்துடன் ஆப்பிள் நிறுவனம் பேச்சு..!!

சென்னை: ஐபோன்களுக்கான கேமரா தயாரிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகப்பா தொழில் குழுமத்துடன் ஆப்பிள் நிறுவனம் பேசி வருகிறது. ஐபோன் உதிரிபாகங்களை இணைப்பது, சிறு பாகங்களை தயாரிக்கும் பணிகளை இந்தியாவில் மேற்கொள்ள ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான், பெகட்ரான் ஆகிய நிறுவனங்கள் ஐபோன்களை தயாரித்து வருகின்றன. தற்போது ஐபோன்களுக்கான கேமராக்களை ஆப்பிள் நிறுவனம் சீனாவில் தயாரித்து வாங்கி வருகிறது. ஐபோன்கள் தயாரிக்கும் பணியை படிப்படியாக சீனாவில் இருந்து இந்தியா போன்ற நாடுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் மாற்றி வருகிறது.

ஆப்பிள் நிறுவனம் தனது மொத்த ஐபோன்களில் 14% ஐபோன்களை கடந்த (2023-24) நிதியாண்டில் இந்தியாவில் தயாரித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் மொத்த ஐபோன்களில் 7-ல் ஒன்று தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐபோன்களின் மதிப்பு ரூ.1,16,521 கோடியாக உயர்ந்துள்ளதாக பிளூம்பெர்க் தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் தயாரிக்கப்படும் மொத்த ஐபோன்களில் 67 சதவீதத்தை சென்னை அருகே உள்ள ஆலையில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தயாரிக்கிறது. சென்னை அருகே பெகட்ரான் அமைத்துள்ள ஆலையில் 17% ஐபோன்களும், விஸ்ட்ரான் ஆலையில் 16% ஐபோன்களும் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஐபோன்களுக்கான கேமரா தயாரிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகப்பா தொழில் குழுமத்துடன் ஆப்பிள் நிறுவனம் பேச்சு..!! appeared first on Dinakaran.

Related Stories: