அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது: எடப்பாடி பழனிசாமி பேச்சு

காஞ்சிபுரம்: அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரம் (தனி) தொகுதியில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். காஞ்சிபுரம் வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்; அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களால்தான் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. அதிமுக அரசின் குடிமராமத்து திட்டத்தால் பல பயன்களை மக்கள் பெற்றனர்.

மக்களுக்காக வாழ்ந்தவர்கள் யார், வீட்டுக்காக வாழ்ந்தவர்கள் யார் என்பது உங்களுக்கு தெரியும்.மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர்கள் நம்முடைய தலைவர்கள். அதிமுக அரசின் குடிமராமத்து திட்டத்தால் பல பயன்களை மக்கள் பெற்றனர். பேரறிஞர் அண்ணாவின் கனவுகளை நனவாக்கும் கட்சிதான் அதிமுக. காஞ்சிபுரத்தில் கைத்தறி, விசைத்தறி தொழில்கள் நலிவடைந்துவிட்டது. மக்களுக்கு சேவை செய்வதில் அதிமுக முன்னணியில் உள்ளது. அதிமுக ஆட்சியில் தான் காஞ்சிபுரத்தில் அத்திவரதர் அருள்பாலித்தார்.

அத்திவரதரை தரிசிக்க 50 லட்சம் பேர் குவிந்த போதும், அதிமுக சிறப்பான ஏற்பாடு செய்தது. அதிமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது; விவசாயிகளுக்கு பொற்காலமாக கொண்டுவரப்பட்டது குடிமராமத்து திட்டம். எத்தனையோ பேர் வருவார்கள், போவார்கள் ஆனால் மக்களுக்கு சேவை செய்வது அதிமுகதான்; அதிமுகவை உடைக்க வேண்டும் என்ற திட்டம் பலிக்காது இவ்வாறு கூறினார்.

The post அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது: எடப்பாடி பழனிசாமி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: