நீலகிரி: கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் 2வது முறையாக போட்டியிடும் ராகுல் காந்தி இன்று அந்த தொகுதிக்கு போகும் வழியில் தமிழ்நாட்டுக்கு வந்து தேயிலை தோட்ட தொழிலாளர்களை சந்திக்கிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தான் போட்டியிடும் வயநாடு தொகுதியில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட தமிழ்நாட்டின் எல்லை பகுதியான தாளூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மைதானத்தில் காலை 9.45 மணிக்கு தரையிறங்குகிறார்.
அங்கிருந்து செயின்ட் மேரிஸ் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்துக்கு செல்லும் அவர், நீலகிரி மாவட்ட அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை அவர் சந்திக்கிறார். பின்னர் வயநாடு புறப்பட்டு செல்லும் அவர் சுல்தான் பத்தேரி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். தமிழ்நாட்டு எல்லைப் பகுதிகளில் சுமார் 20 நிமிடங்கள் ராகுல் காந்தி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் ஹெலிகாப்டர் இறங்கு தளம், நிகழ்ச்சி நடைபெறும் தேவாலயம் ஆகியவற்றில் நீலகிரி மாவட்ட எஸ்.பி. ஆய்வு செய்தார்.
The post வயநாடு போகும் வழியில் இன்று நீலகிரிக்கு வருகிறார் ராகுல் காந்தி: தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகளை சந்திக்கிறார் appeared first on Dinakaran.