பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்: செல்வப்பெருந்தகை

சென்னை: பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலம் இந்தியா கூட்டணிக்கு மிகவும் சிறப்பாக அமையும் என்று உறுதியாக நம்புகிறேன் எனவும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள் எனவும் இந்தியாவை காப்பதற்கான ஜனநாயகப் போர்க்களத்தில் திமுகவுடன் ‘கை’ கோத்துப் செல்வப்பெருந்தகை பயணிக்கிறார் எனவும் செல்வப்பெருந்தகைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய எனது அன்பு அண்ணன், தமிழ்நாடு முதலமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் பன்முகத்தன்மையையும், கூட்டாட்சி தத்துவத்தையும் பாதுகாக்கும் போராட்ட களத்தில் நாம் உள்ளோம். எதிர்வரும் காலம் இந்தியக் கூட்டணிக்கு மிகவும் சிறப்பாக அமையும் என்று உறுதியாக நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்: செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.

Related Stories: