மலர் கண்காட்சியை மலர்ச்சியோடு வரவேற்க பிரையன்ட் பூங்காவில் 20 ஆயிரம் பூந்தொட்டி: தயார் செய்யும் பணிகள் தீவிரம்

கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் மலர் கண்காட்சியை முன்னிட்டு 20 ஆயிரம் மலர் தொட்டிகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்பும் இடங்களில் ஒன்றாக பிரையன்ட் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. வருகின்ற மே மாதம் மலர்க்கண்காட்சி நடைபெறுவதை முன்னிட்டு சுமார் 20 ஆயிரம் மலர் தொட்டிகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதில் பேன்சி, பெட்டூனியா, மேரி கோல்ட், லில்லியம், சால்வியா, டையாந்தஸ் உள்ளிட்ட மலர் நாற்றுகள் நடப்படுகின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் பல்வேறு வண்ணங்களில் பூக்கும் விதமாக மலர் செடிகள் நடப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் இருந்து மலர் செடிகள் அனைத்தும் பூத்து கண்களுக்கு விருந்தளிக்கும் என தோட்டக்கலைத்துறை அலுவலர் சிவபாலன் தெரிவித்தார்.

The post மலர் கண்காட்சியை மலர்ச்சியோடு வரவேற்க பிரையன்ட் பூங்காவில் 20 ஆயிரம் பூந்தொட்டி: தயார் செய்யும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: