அமலாக்கத்துறை காவலில் உள்ள டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை பாதிப்பு: ஆம் ஆத்மி கட்சி தகவல்

டெல்லி: அமலாக்கத்துறை காவலில் உள்ள டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை பாதிப்பு என ஆம் ஆத்மி கட்சி தகவல் அளித்துள்ளது. முதலமைச்சர் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் கெஜ்ரிவால் கடந்த 24-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, எம்பி சஞ்சய் சிங், தெலங்கானா எம்எல்சி கவிதா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 24-ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்து, தங்களது கஸ்டடியில் வைத்து விசாரித்து வருகிறது.

அமலாக்கத்துறை காவலில் உள்ள டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை பாதிப்பு என ஆம் ஆத்மி கட்சி தகவல் அளித்துள்ளது. 55 வயதான அவர் ஒரு நீரிழிவு நோயாளி மற்றும் அவரது இரத்த சர்க்கரை ஏற்ற இறக்கமாக உள்ளது என்று அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் அவரை சந்தித்த பிறகு கூறினார்.
கெஜ்ரிவாலின் ரத்தத்தில் சர்க்கரை அளவு 46ஆக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நான் நேற்று மாலை என் கணவரை(அரவிந்த் கெஜ்ரிவாலை) சிறையில் சந்தித்தேன். அவருக்கு நீரிழிவு நோய் உள்ளது மற்றும் அவரது சர்க்கரை அளவு சரியாக இல்லை” என அவரது மனைவி கூறினார். கட்சித் தலைவர்கள் மற்றும் கெஜ்ரிவாலின் வீட்டில் பல சோதனைகள் நடத்தப்பட்ட போதிலும், முறைகேடு என கூறப்படும் பெரும் தொகையை ஏஜென்சியால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் எங்கள் வீட்டிலிருந்து ரூ.73,000 மட்டுமே கண்டுபிடித்தனர் எனவும் கெஜ்ரிவாலின் மனைவி கூறினார்.

அமலாக்கத்துறை 9 முறையாக சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாததையடுத்து அவர் கடந்த கடந்த 24-ம் தேதி கைது செய்யப்பட்டார். டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு கைது செய்வதிலிருந்து பாதுகாப்பு வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post அமலாக்கத்துறை காவலில் உள்ள டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை பாதிப்பு: ஆம் ஆத்மி கட்சி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: