இந்த நிலையில், திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் சிறப்பு அழைப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், நெசவாளர்கள், மீனவ சங்கங்கள், தொழில் முனைவோர், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், கல்வியாளர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் சந்தித்து கருத்துக்களை கேட்டனர். இதில் கலந்து கொண்டு தங்கள் பரிந்துரைகளை அவர்கள் அளித்தனர். மேலும் கோரிக்கை மனுக்களையும் அளித்தனர். இதைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் கலைஞர் அரங்கத்தில் வைத்து திமுகவின் சென்னை வடக்கு, சென்னை வட கிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை நேரில் சந்தித்து பரிந்துரைகளைப் பெறுகின்றனர். இதனிடையே இதுவரை திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து 4000 கோரிக்கைகள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
The post இதுவரை 4000 கோரிக்கைகள் வந்துள்ள நிலையில், சிறப்பு அழைப்பாளர்களுடன் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு தீவிர ஆலோசனை!! appeared first on Dinakaran.