செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

சென்னை: செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் மழையால் பாதிப்பு தொடர்பான பொதுமக்கள் புகார் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 04427 66417 – 044 27666746 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவும் தகவல் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் மழை பாதிப்பு தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாட்ஸ்அப் எண் – 9444272345, கட்டணமில்லா தொலைபேசி எண் – 1077, தொலைபேசி எண்கள் – 044 – 27427412, 27427414 என்ற எண்கள் மூலம் புகார்களை அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

The post செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: