மாநகராட்சியின் 16 சுரங்க பாதைகள், நெடுஞ்சாலைத்துறையின் 6 சுரங்க பாதைகள் என 22 சுரங்கபாதைகளில் தேங்கிய மழைநீர் உடனுக்குடன் வெளியியேட்டப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி பயணம் செய்தனர். சென்னையில் கடந்த ஆண்டு 5 நாட்களுக்கும் மேல் தண்ணீர் தேங்கிய 172 சாலைகளில் இந்த ஆண்டு தண்ணீர் தேங்கவில்லை. இதற்கு சிங்கார சென்னை 2.O திட்டம் வெள்ள நிதி உள்ளிட்ட நிதி ஆதாரங்களின் அடிப்படையில் சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் கட்டமைப்பை புதியதாக அமைத்தது முக்கிய காரணமாக பார்க்கப்படுவதாக வாகன ஓட்டிகள் கூறியுள்ளனர்.
மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்கள் என கண்டறியப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக சென்று உரிய உதவிகளை செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர்கள் களத்தில் சுழன்று வேலை செய்தனர். குறுகிய காலத்தில் கனமழை வெளுத்து வாங்கிய போதும் மழைநீர் உடனுக்குடன் வழிந்தோடியதால் முந்தைய காலங்களில் சந்தித்த பெரும் துயரங்களில் இருந்து சென்னை வாசிகள் மீண்டுள்ளனர்.
The post சென்னையில் நேற்றிரவு வெளுத்து வாங்கிய கனமழை.. உடனடி நடவடிக்கை எடுத்த அரசு: முன்பு சந்தித்த பெரும் துயரங்களில் இருந்து மீண்டதாக நெகிழ்ச்சி appeared first on Dinakaran.