ஹைதராபாத்: தெலங்கானா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு . மற்ற பகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மக்கள் நீண்ட வரிசையில் இருந்து வாக்களித்து வருகின்றனர். தெலங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு முக்கிய கட்சிகளான பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பாஜக, எம்.ஐ.எம், சி.பி.எம்., பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளும் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 2,290 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். அவர்களில் பெண்கள் 221, ஆண்கள் 2,068, திருநங்கை ஒருவர் போட்டியில் உள்ளார்.
மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 3 கோடியே 26 லட்சத்து 1,799. இதில் ஆண் வாக்காளர்கள் 1 கோடியே 62 லட்சத்து 98 ஆயிரத்து 418. பெண் வாக்காளர்கள் 1 கோடியே 63 லட்சத்து 705 பேர். திருநங்கைகளின் எண்ணிக்கை 2,676 ஆவர். தேர்தலுக்காக 35 ஆயிரத்து 655 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
The post தெலங்கானா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது! appeared first on Dinakaran.