கனமழை பாதித்த இடங்களுக்கு செல்ல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுகிறது; நாளை மறுநாள் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கனமழை பாதித்த இடங்களுக்கு செல்ல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனடியாக களத்துக்கு சென்று பணியாற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னையின் மீது வானத்தில் மேகத்திரட்சி ஏற்பட்டுள்ளதால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் சென்னையில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கனமழை பெய்து வருவதால் அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் உடனடியாக களத்திற்கு சென்று பணியாற்ற வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். மேலும் இரவு முழுவதும் களப்பணியாற்ற வேண்டும் என சென்னை மாநகரட்சி ஊழியர்களுக்கு கமிஷனர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முன்னதாக சென்னையில் கடந்த 4 மணி நேரத்தில் சராசரியாக 6 செ.மீ.,வரையில் மழை பெய்துள்ளது. ஐந்து இடங்களில் சுமார் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக கொளத்தூரில் 14 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

The post கனமழை பாதித்த இடங்களுக்கு செல்ல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: