இதனால் மாநில எல்லைகளாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் உதகையில் இருந்து இயக்கப்படும் 430க்கும் மேற்பட்ட தமிழ்நாடு அரசு பேருந்துகள் நேற்று இரவு முதல் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இரு மாநில பயணிகள் பெரிதும் அலைக்கழிப்புக்கு ஆளாகி உள்ளனர். சரக்கு லாரி போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், பலகோடி ரூபாய் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவிற்கு லாரிகளை இயக்க வேண்டாம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவுறுத்தி உள்ளது. தமிழ்நாடு பதிவெண் கொண்ட வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவில் உள்ள லாரிகளை தமிழ்நாடு – கர்நாடக எல்லையான அத்திப்பள்ளிக்கு முன்பாக நிறுத்தி வைக்கும்படியும் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு பிறகு சூழலுக்கு ஏற்ப லாரி போக்குவரத்து தொடங்கும் என்று தெரிகிறது.
The post காவிரி விவகாரம். பெங்களுருவில் முழு அடைப்பு போராட்டம்; 144 தடை உத்தரவு; தமிழக-கர்நாடகா எல்லையில் பஸ், லாரிகள் நிறுத்தம்!! appeared first on Dinakaran.