கர்நாடக தேர்தல் பார்முலாவை ராஜஸ்தானிலும் பின்பற்றும் காங்கிரஸ்: முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்தை தொடர்ந்து 100 யூனிட் மின்சாரம் இலவச அறிவிப்பை அசோக் கெலாட் வெளியிட்டுள்ளார். வரும் டிசம்பர் மாதத்திற்குள் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் ராஜஸ்தான் மாநிலத்தில் அரசியல் கட்சிகள் தற்போதே தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க தொடங்கியுள்ளன. அண்மையில் கர்நாடக தேர்தலில் 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பேருந்து சேவை உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் காங்கிரசுக்கு வெற்றி பெற்று தந்தன.

அதேபோல ராஜஸ்தானிலும் மக்களை கவரும் வகையில் இலவச அறிவிப்பு திட்டங்களை முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்து வருகிறார். இதற்கு முன் ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு சிலிண்டர்களை வாங்க மாதம்தோறும் ரூ.500 மானியம் வழங்கப்படும் என அறிவித்து அதனை செயல்படுத்திய அசோக் கெலாட் தற்போது 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 100 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் ஏற்கனவே உள்ள நிலையான கட்டணத்தை செலுத்தினால் போதும் என்று அவர் கூறியுள்ளார்.

The post கர்நாடக தேர்தல் பார்முலாவை ராஜஸ்தானிலும் பின்பற்றும் காங்கிரஸ்: முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: