×
Saravana Stores

வனஅலுவலர் வீட்டில் 8.5 பவுன் நகை திருட்டு

சின்னசேலம், மார்ச் 23: கச்சிராயபாளையம் அருகே ஓய்வுபெற்ற வனச்சரக அலுவலர் வீட்டில் கதவை உடைத்து 8.5 பவுன் தங்க நகை திருடு போனது. கச்சிராயபாளையம் அருகே பரிகம் செக்போஸ்ட் அருகில் குடியிருந்து வந்தவர் செந்தில்குமார்(38). இவர் கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். இவருடைய தந்தை வனத்துறையில் வேலை செய்து ஓய்வுபெற்றவர். இந்நிலையில் இவருடைய தாய் லோகேஸ்வரி கள்ளக்குறிச்சி கேபிஆர் நகரில் குடியிருந்து வருகிறார். இதனால் பரிகத்தில் உள்ள வீடு பூட்டியே இருக்கும். மேலும் வீட்டின் நான்கு பக்கமும் கண்காணிப்பு கேமரா பொருத்தி இருக்கும்.

இந்நிலையில் அந்த வீட்டின் உள்கதவை உடைத்து வீட்டில் இருந்த 8.5 பவுன் நகைகளை திருடி சென்றுள்ளனர். மேலும் அந்த மர்ம நபர்கள் சிசிடிவி கேமராவை உடைத்தும், ஒயரை துண்டித்தும், அதில் இருந்த ஹார்டு டிஸ்க்கை கழற்றி சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த செந்தில்குமார் வந்து பார்த்துள்ளார். பின் இந்த திருட்டு சம்பவம் குறித்து செந்தில்குமார் கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அந்த வீட்டிற்கு கச்சிராயபாளையம் போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்