×
Saravana Stores

வடலூரில் நூதன முறையில் மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது

வடலூர், மார்ச் 22: மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். வடலூர் அருகே கருங்குழி பெருமாள் கோயில் தெரு பகுதியை சேர்ந்த லூர்துசாமி மனைவி விக்டோரியா (63). லூர்துசாமி இறந்து ஏழு மாதங்கள் ஆன நிலையில் மூதாட்டி வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இதனை அறிந்த இளைஞர் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி நகை அணிந்து இருந்தால் உதவித்தொகை கிடைக்காது என்று கூறி அவர் அணிந்திருந்த 4 கிராம் தங்க தோட்டை கழட்டி கொடுங்கள், ஒரு வெள்ளை பேப்பரில் மடித்து கொடுக்கிறேன், அதை பத்திரமாக வைத்து கொள்ளுங்கள் என வாங்கியுள்ளார்.

ஆனால் அந்த இளைஞர் நகையை பாக்கெட்டில் வைத்து க்கொண்டு அந்த பேப்பரில் இரண்டு சிறிய கற்களை வைத்து மடித்துக் கொடுத்துவிட்டு அதிகாரிகளை அழைத்து வருகின்றேன் என்று கூறி, குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். வீட்டின் உள்ளே சென்று தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து பார்த்தவுடன் இளைஞர் அங்கு இல்லை. பின்னர் மூதாட்டி பேப்பரை பிரித்து பார்த்துள்ளார். அதில் நகைகளுக்கு பதில் கற்கள் இருப்பதை கண்டதும் அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில்,  கடந்த மாதம் 25ம் தேதி மூதாட்டியிடம் நகை பறித்த இளைஞரை வடலூர் போலீசார் கைது செய்தனர். நாளிதழில் வந்த இந்த செய்தியில், இளைஞர் படத்தை பார்த்ததும் விக்டோரியா உடனடியாக வடலூர் காவல் நிலையம் வந்து புகார் செய்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார், ஜாமினில் வெளியில் இருந்த முஷ்ணம் அருகே முடிகண்டநல்லூர் வடக்கு தெரு சாமிதுரை மகன் சரத்குமார் (27) என்பவரை கைது செய்து.  சிறையில் அடைத்தனர்.

Tags : Vadalur ,
× RELATED வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது