ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த நிலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,800 குறைவு

 

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,800 குறைந்துள்ளது. தங்கம் விலை என்பது கடந்த ஆண்டு இறுதியில் இருந்து உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு என்பது இந்தாண்டும் தொடர்ந்து வருகிறது. இப்படி இருந்து வரும் வேளையில் கடந்த வாரமாக தங்கம், வெள்ளி விலை என்பது வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம், வெள்ளி விலை எகிறி புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் பெரிய அளவில் உயர்வு என்பது எப்போதாவது ஒரு நாள் இருக்கும். ஆனால் கடந்த ஒரு வாரமாக தங்கம், வெள்ளி விலை காலை மற்றும் பிற்பகலில் விலை ஏற்றம் என்று இருந்து கொண்டிருக்கிறது.

அதுவும், பவுனுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. நேற்று முன்தினம் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு தங்கம் விலை ஏற்றம் கண்டது. அதாவது தங்கம் விலை நேற்று முன்தினம் காலையில் கிராமுக்கு ரூ.370 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,330க்கும், பவுனுக்கு ரூ.2,960 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,22,640க்கும் விற்கப்பட்டது. பின்னர் பிற்பகலில் மேலும் தங்கம் விலை அதிகரித்தது. பிற்பகலில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு கிராம் 15,60க்கும், பவுனுக்கு ரூ.2,240 அதிகரித்து. ஒரு பவுன் ரூ.1,24,880க்கும் விற்கப்பட்டது.

அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் காலை, மாலை என தங்கம் விலை பவுனுக்கு ரூ.5,200 உயர்ந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் வெள்ளி விலையும் நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.13 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.400க்கும், கிலோவுக்கு ரூ.13 ஆயிரம் அதிகரித்து, பார் வெள்ளி ரூ.4 லட்சத்துக்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.4,800 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,29,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு ரூ.600 குறைந்து ஒரு கிராம் ரூ.16,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.415க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ஒரு கிலோ ரூ.4.15 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: