×

குடியரசுத்தலைவர் உரை மூலம் ஒன்றிய பா.ஜ. அரசு தம்பட்டம் அடிப்பது மக்களுக்கு தெரியும்: வைகோ காட்டம்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்களின் முன்னேற்றமே அரசின் முக்கிய நோக்கம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய பயணத்தை அரசு முன்னெடுத்து வருகிறது என்றார். இந்திய மக்கள் தொகையில் 10 சதவீதத்தினர் மட்டுமே இந்தியாவின் மொத்த வருமானத்தில் தோராயமாக 58 சதவீதத்தை ஈட்டுகிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது. மக்கள் தொகையில் கீழ் அடுக்கில் உள்ள 50 சதவீதத்தினர் இந்தியாவின் வருமானத்தில் 15 சதவீதத்தை மட்டுமே ஈட்டுகிறார்கள் என்கிறது அந்த அறிக்கை. உண்மை நிலை எவ்வாறு இருக்க, எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்று மோடி அரசு குடியரசுத் தலைவர் உரையில் தம்பட்டம் அடித்துக் கொண்டுள்ளது. ஒன்றிய பாஜ அரசு தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வது நாட்டு மக்களுக்கு தெரியும். அவர்களை ஏமாற்றி விட முடியாது.

Tags : Republican ,Union ,J. ,Wiko Katam ,Chennai ,General Secretary ,Wiko ,President of the Republic ,Drawpati Murmu ,Parliament ,
× RELATED கலவரக்கார புத்திகொண்ட பாசிச...