×

நேற்றிரவு ஜம்மு – காஷ்மீரின் சோன்மார்க்கில் பயங்கர பனிச்சரிவு: மக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஸ்ரீநகர்: சோன்மார்க் சுற்றுலாத் தலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. மத்திய காஷ்மீரின் கந்தர்பல் மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான சோன்மார்க்கில் கடந்த 24 மணி நேரமாக மிதமானது முதல் கனமழை வரை பனிப்பொழிவு இருந்து வந்தது. இதனால், கந்தர்பல் மாவட்டத்திற்கு நேற்று முதல் கடுமையான பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சோன்மார்க்கின் சர்பல் பகுதியில் நேற்றிரவு சுமார் 10.12 மணியளவில் மிகப்பெரிய பனிச்சரிவு ஏற்பட்டது.

மலைப்பகுதியில் இருந்து ‘பனிச்சுவர்’ போல வேகமாக சரிந்து வந்த பனி, குடியிருப்புகள் மற்றும் தங்கும் விடுதிகளை நோக்கி சீறிப் பாய்ந்தது. இந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. வழியில் இருந்த பல கட்டிடங்கள் மற்றும் வாகனங்களை பனி மூடியது. இந்த விபத்தின் தீவிரம் மற்றும் சேதங்கள் கேமராவில் தெரிந்தபோதிலும், இன்று காலை நிலவரப்படி காயங்களோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பனிச்சரிவு அபாயங்களால் ஜம்மு-நகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதுடன், நகர் விமான நிலையத்தில் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Sonmark, Jammu ,Kashmir ,Srinagar ,Sonnmark ,Central Kashmir ,Kandarpal district ,
× RELATED அஜித்பவார் மரணம் அதிர்ச்சி...