×

மத அரசியல் செய்வோருக்கு தமிழ்நாட்டில் இடமில்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4,000 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆயிரமாவது குடமுழுக்கு 2023ல் மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயிலில் நடைபெற்றது. 2 ஆயிரமாவது குடமுழுக்கு 2024ல் மயிலாடுதுறை கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயிலில் நடந்தது. 3 ஆயிரமாவது குடமுழுக்கு நாகை திருப்புகலூர் அக்னீஸ்வரர் திருக்கோயிலில் 2025ல் நடந்தது. 4 ஆயிரமாவது குடமுழுக்கு இன்று பெரம்பூர் சேமாத்தம்மன் கோயிலில் நடைபெற்றது. இதுவரை இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லை. மத அரசியல் செய்வோருக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்றும் கூறினார்.

Tags : Tamil Nadu ,Chief Minister ,K. Stalin ,Chennai ,MLA ,Western Mambalam ,Kasi Viswanathar Temple ,Mayiladudura ,Talaparasalur ,Weerateswarar ,
× RELATED இஸ்லாமியர்களின் அன்புதான் எனக்கு...