டெல்லி : பாராமதி விமான விபத்து தொடர்பாக விசாரணையை தொடங்கியது சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம். விபத்து நடந்த இடத்தில் இருந்த பாகங்கள் சிதறிக் கிடந்ததைப் வைத்து முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. விமானம் என்ன வேகத்தில் வந்தது, எந்த திசையில் வந்தது என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். முன்னதாக இன்று காலை மராட்டிய மாநிலம் பாராமதி விமான நிலையத்தில் அஜித் பவார் சென்ற விமானம் தரையிறங்க முயற்சித்தபோது, தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அஜித் பவார் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
