- வீடு கட்டிடம்
- கலைஞர்
- ராஜபாலியம்
- சிவகாசி
- கனவு
- வீட்டில்
- குடியரசு தினம்
- ராஜபாளையம் கிருஷ்ணபுரம் ஊராட்சி
- தங்கபாண்டியன்
ராஜபாளையம்/சிவகாசி : கிராமசபை கூட்டத்தில் மனு அளித்த மக்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டித்தர தங்கப்பாண்டியன் எம்எல்ஏ நடவடிக்கை மேற்கொண்டார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு ராஜபாளையம் கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி மனு அளித்தனர்.
அதற்கு உடனடியாக பதிலளித்த சட்டமன்ற உறுப்பினர், ‘‘கடந்த 5 ஆண்டு காலத்தில் 2 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது 1 லட்சம் வீடுகள் கட்டி தரப்படும் என கடந்த வாரம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்’’ எனக் கூறினார்.
மேலும் வீடு வேண்டி விண்ணப்பம் செய்தவர்களுக்கு உடனடியாக கிராம சபைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுமதி கோப்புகளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கையும் மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, பொதுமக்கள் தரப்பில் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.அதனைத்தொடர்ந்து சத்துணவுத்துறை சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், பொறியாளர் ராமமுனீஷ்வரன், கிளர்க் ராதாகிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் காந்தி, கிளைச்செயலாளர்கள் லட்சுமணன், நம்பி, பழனிக்குமார், கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.சிவகாசி: ஆனையூர் ஊராட்சியில் குடியரசு தினவிழா கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது.
தனி வட்டாட்சியர் மாதா, அங்கன்வாடி பணியாளர் அருணா, பற்றாளர் அமுதா மற்றும் அரசு அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நாரணாபுரம் ஊராட்சியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
கிராம சபை கூட்டத்தில் மாவட்ட அளவிலான பற்றாளராக நாச்சியாரம்மாள், ஊராட்சி ஒன்றிய அளவிலான பற்றாளராக சுமதி மற்றும் பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊராட்சிமன்ற செயலாளர் ஜெ.ஜெகதீஸ்வரி செய்திருந்தார். கிராமசபை கூட்டத்தில் வாக்காளர் தின விழிப்புணர்வு நடவடிக்கையாக வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
