- மதுரை
- மதுரை மாவட்டம்
- தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள்
- தமிழ்ஹராசன்
- காசிதுரை
- வருவாய் அதிகாரி
- சங்கம்
- மண்டபம்
மதுரை, ஜன. 26: தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் மதுரை மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்தது. மாநில நிர்வாகிகள் தமிழரசன், காசிதுரை ஆகியோர் முன்னிலையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய்துறை அலுவலர் சங்க அரங்கில், இதற்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 483 வாக்காளர்களில் 437 பேர் வாக்களித்தனர். பதிவான வாக்குகள் அனைத்தும் உடனடியாக எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையர் ராஜ்குமார் அறிவித்தார்.
இதில் மாவட்டத் தலைவராக முகைதீன் அப்துல்காதர், துணைத் தலைவர்களாக மணிமேகலை, இங்கர்சால், சுரேஷ் பிரெடரிக் கிளமெண்ட், திருமுருகன், முருகானந்தம் ஆகியோர் வெற்றி பெற்றனர். மாவட்ட செயலாளராக அசோக்குமார், இணைச் செயலாளராக இலக்கியா, செந்தில்குமரன், திருநாவுக்கரசு, நாகேந்திரன், ராமச்சந்திரன், பொருளாளராக ராம்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை, முந்தைய நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
