பலோடாபஜார்: சட்டீஸ்கரின் பலோடாபஜார் -படாபாரா மாவட்டத்தில் உள்ள பக்குலாஹி கிராமத்தில் ரியல் இஸ்பாட் அண்ட் பவர் லிமிடெட் என்ற பெயரில் எஃகு தொழிற்சாலை இயங்கி வருகின்றது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் தூசி படிதல் அறையில் இருந்த இயந்திரம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அங்கு பணியில் இருந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். அங்கு மீட்பு பணி நடக்கிறது.
