அதிமுக தலைமை விவகாரம், இரட்டை இலை தொடர்பான மனுக்கள் பரிசீலனையில் உள்ளன: தேர்தல் ஆணையம் பதில் மனு

டெல்லி: அதிமுக தலைமை விவகாரம், இரட்டை இலை தொடர்பான மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இரட்டை இலை அதிமுக பெயர், கொடி பயன்படுத்துவது தொடர்பாக பலரிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: