வங்காள விரிகுடா அருகே மூழ்கிய வங்கதேச கப்பல்: 12 மாலுமிகள் பத்திரமாக மீட்பு

கொல்கத்தா: வங்கதேசத்தை சேர்ந்த சரக்கு கப்பலான எம்.வி.தம்ஜித் என்ற சரக்கு கப்பல் கொல்கத்தா துறைமுகத்தில் இருந்து பொருட்களை ஏற்றி கொண்டு வழியே சென்றது. இந்த கப்பல் முரி ஆற்றின் வழியே சென்ற கப்பல் வங்காள விரிகுடா பகுதி அருகே வந்த போது இயந்திர கோளாறு காரணமாக கப்பல் மணல் திட்டு ஒன்றில் சிக்கியது. இதனால் மாலுமிகள் கப்பலில் தத்தளித்து கொண்டிருந்தனர். இது குறித்து மீனவர்கள் சாகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சென்று 12 மாலுமிகளை போலீசார் பத்திரமாக மீட்டனர். அவர்களில் 11 பேர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள்.

Related Stories: