ஐஎஸ் ஆதரவாளர்கள் தங்கியிருந்த முகாமை சிரியா கைப்பற்றியது

அல் ஹோல்: சிரியாவின் வட கிழக்கு பகுதியில் குர்து இனத்தவர்களின் ஆயுத குழுவான சிரியா ஜனநாயக படையினர்(எஸ்டிஎப்)பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த நிலையில், அல் ஹோல் என்ற இடத்தில் உள்ள முகாமை சிரிய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்த முகாமில் பெண்கள், சிறுவர்கள் அதிகமாக உள்ளனர்.

மொத்தம் 24000 பேர் உள்ள இந்த முகாமில் 6500 பேர் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த ஐஎஸ் ஆதரவாளர்கள்.  நேற்றுமுன்தினம் ஷடாடே நகரில் குர்துகளிடம் இருந்த சிறையை சிரிய ராணுவம் கைப்பற்றியது. அதில் 120 தீவிரவாதிகள் தப்பி ஓடினர். தப்பி ஓடிய தீவிரவாதிகளை சிரிய ராணுவம் கைது செய்துள்ளது.

Related Stories: