டாவோஸ்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் மொத்தம் 50 சதவீத இறக்குமதி வரி விதித்தார். மேலும் 500 சதவீத வரி விதிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யவும் அனுமதி அளித்துள்ளார்.
இந்த நிலையில் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 25 சதவீத வரியை அதிபர் டிரம்ப் விதித்த பிறகு, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,’உக்ரைன் மோதல் தொடங்கிய பிறகு இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்கத் தொடங்கியது. ஆனால் அதிபர் டிரம்ப், இந்தியா மீது 25 சதவீத வரியை விதித்தார். இதையடுத்து இந்தியா தற்போது ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்திவிட்டது’ என்றார்.
