- அமைச்சர்
- Geethajeevan
- தூத்துக்குடி
- மணி
- மணி - பாண்டிச்செல்வி
- மாரிப்ரியா
- ராஜபாளையம், மாப்பிள்ளையூரணி ஊராட்சி
- ராஜேந்திரன் -
- தனபால்
தூத்துக்குடி, ஜன. 22: அமைச்சர் கீதாஜீவன் நேர்முக உதவியாளர் மணி இல்லத் திருமணம், தூத்துக்குடியில் நாளை(23ம் தேதி) நடைபெறுகிறது. தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சி ராஜபாளையத்தை சேர்ந்த மணி – பாண்டிச்செல்வி மகள் மாரிப்பிரியா, தூத்துக்குடி ராஜேந்திரன் – தனபால் ஆகியோரது மகன் தருண்நட்ராஜ் ஆகியோரது திருமணம், தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் உள்ள மாணிக்கம் மகாலில் நாளை(23ம் தேதி) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. இவர்களது திருமணத்தை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்து நடத்தி வைக்கிறார். இதில் எம்எல்ஏக்கள், திமுக மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு உள்ளிட்ட அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர். திருமணத்திற்கான ஏற்பாடுகளை அமைச்சரின் நேர்முக உதவியாளர் மணி -பாண்டிச்செல்வி, பெரியசாமி சுரேஷ், சரண்யா மற்றும் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
