போலீஸ் உடல் தகுதி தேர்வுக்கு சிறப்பு பயிற்சி

சேலம், ஜன.21:தமிழக காவல்துறையில் காலியாக இருந்த இரண்டாம் நிலைக்காவலர், சிறை மற்றும் சீர்திருத்தத்துறையில் இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தீயணைப்பாளர் என மொத்தம் 3644 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வௌியிடப்பட்டது. இந்த பணிக்கு மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான தேர்வர்கள் விண்ணப்பித்தனர். தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் எழுத்து தேர்வு நடத்தப்பட்டு, கடந்த மாதம் எழுத்து தேர்வு முடிவுகள் வௌியிடப்பட்டது. எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு, உடல்கூறு மற்றும் உடல் உறுதி தேர்வு நடைபெற உள்ளது. எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள், உடல் உறுதித்தேர்வில் தேர்ச்சி பெறும் வகையில், விளையாட்டு மைதானங்களில் சிறப்பு பயிற்சி பெற்று வருகின்றனர். அதன்படி, சேலம் காந்தி ஸ்டேயடித்தில் இரண்டாம் நிலைக்காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, 1500மீ, 400மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், கிரிக்கெட் பந்து எறிதல் உள்ளிட்ட போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. உடல் தகுதித்தேர்வில் வெற்றிபெறும் நுணுக்கங்களை பயிற்சியாளர்கள் வழங்கினர்.

Related Stories: