சென்னை: ராமதாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் மற்றும் ரிட் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. டெல்லி உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பாமக தலைவர் யார் என்பதில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. போலி ஆவணங்களை கொடுத்து பாமகவை அன்புமணி கைப்பற்ற முயற்சிப்பதாக ராமதாஸ் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
