அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: 19 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்தி முதலிடம்

மதுரை: உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 11 சுற்றுகளாக நடைபெற்றது. காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1,002 காளைகள் களம் கண்டன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதி சுற்றில் மாடுபிடி வீரர்கள் கார்த்தி, அபிசித்தர் இடையே முதலிடம் பிடிக்க கடும்போட்டி நிலவியது. 19 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்தி முதலிடம் பிடித்தார். முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் கார்த்திக்கு கார் மற்றும் ரூ.3 லட்சம் பணம் பரிசாக வழங்கப்பட்டது.


பூவந்தி கிராமத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அபிசித்தர் 16 காளைகளை அடக்கி 2ம் இடத்தை பிடித்தார். 2ம் இடத்தை பிடித்த அபிசித்தருக்கு இருசக்கர வாகனம் மற்றும் ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. பாசிங்காபுரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் ஸ்ரீதர் 11 காளைகளை அடக்கி 3ம் இடம் பிடித்தார். மூன்றாமிடத்தைப் பிடித்த மாடுபிடி வீரர் ஸ்ரீதருக்கு இருசக்கர வாகனம் மற்றும் ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.வி.எம். பாபுவின் காளைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. சிறந்த காளையாக தேர்வான ஏ.வி.எம். பாபுவின் காளைக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. 2 இடம் பிடித்த காளையின் உரிமையாளர் தமிழ்ச்செல்வனுக்கு பைக், கன்றுடன் கூடிய கறவை மாடு பரிசாக வழங்கப்பட்டது. 3 இடம் பிடித்த காளையின் உரிமையாளர் கென்னடிக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

Related Stories: