- கால்நடைகள்
- புத்தலூர் வட்டம் புதுக்குடி
- திருக்காட்டுப்பள்ளி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- புதுக்குடி
- தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடி
- சென்னை
- தஞ்சாவூர்
- முரசொலி
- துணை
- மேயர்
- மாரு
*முதல்வர் காணொலியில் திறந்து வைத்தார்
திருக்காட்டுப்பள்ளி : தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் புதுக்குடியில் கால்நடை தீவன தொழிற்சாலையினை நேற்று திறந்து வைத்தார். தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் புதுக்குடியில் நபார்டு திட்டத்தின் கீழ் 100 சதவீதம் மானியத்தில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 300 மெ.டன் திறனுடைய கால்நடை தீவன உற்பத்தி தொழிற்சாலை தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று திறந்து வைத்தார்.
ஆவின் நிறுவனத்தால் கட்டப்பட்ட மூன்றாவது தீவன தொழிற்சாலை ஆகும். இதன் மூலம் அருகில் உள்ள 6 ஆவின் ஒன்றியங்களை சேர்ந்த 12 மாவட்டங்களுக்கும் பால் உற்பத்தியாளர்களின் மாடுகளுக்கு தங்குதடையின்றி கால்நடை தீவனம் விநியோகிக்கப்பட உள்ளது.
இந்நிகழ்வில் தஞ்சாவூர் ஆவின் பொது மேலாளர் சரவணகுமார், பால்வளம் துணைப் பதிவாளர் வெங்கடேசன், துணைப் பதிவாளர் ஆரோக்கியதாஸ், புதுக்குடி கால்நடை தீவன உற்பத்தி தொழிற்சாலை பொறுப்பாளர் மரு.வடிவேலு உதவி பொது மேலாளர், திட்ட ஒருங்கிணைப்பாளர் மரு.எஸ்.மாதவகுமரன், மேலாளர் பொறியியல் பசும்பொன் ராஜா, தரக்கட்டுப்பாடு ஆய்வக பொறுப்பாளர் லட்சுமி பிரியா, திருபாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

