×

பாஜ கூட்டணி ஆளும் புதுச்சேரியில் ரூ.3,000 பொங்கல் ரொக்கப்பரிசு

 

புதுச்சேரி: தமிழகத்தில் பொங்கல் தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தைபோல் புதுவையில் ரூ.750 மதிப்பிலான பொங்கல் தொகுப்பு ரேசன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசுத் தொகை அறிவிக்கப்படாத நிலையில், தமிழகத்தைபோல் புதுவையிலும் வழங்க வேண்டுமென திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

அங்கு பாஜ, என்ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில், இவ்விவகாரம் குறித்து கவர்னர் கைலாஷ்நாதன் முதல்வர் ரங்கசாமி மற்றும் உயர் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழகத்தைப்போலவே புதுச்சேரியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 வழங்க கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து புதுச்சேரி முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 3.47 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3 ஆயிரத்தை ( ெமாத்தம் ரூ.104 கோடி) பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அல்லது பொங்கலுக்கு பிறகு ரூ.3,000 ரொக்கப்பரிசு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : BJP ,Puducherry ,Tamil Nadu ,Tamil Nadu… ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...