×

ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் சிறைப்பிடிப்பு

 

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் சுமார் 450க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று பாக்ஜலசந்தி கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இரவு இந்திய கடல் எல்லை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்க விடாமல் விரட்டி அடித்தனர்.

தொடர்ந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் நள்ளிரவில், தென்னரசு என்பவரின் படகை சிறைபிடித்து அதிலிருந்த ஜார்ஜ் டோக்கி(40), சுதன்(42), கனகராஜ்(25), சுமித்(38), பரலோகராஜ்(35), கோபி(27), ஆரோக்கிய ரூபட்(42), பிரேம்குமார்(35), தினேஷ்(33), ராஜேஷ்(38) ஆகிய 10 மீனவர்களையும் கைது செய்தனர்.

இதனைக் கண்ட மற்ற மீனவர்கள் அப்பகுதியில் மீன் பிடிக்காமல் சிதறினர். கைது செய்யப்பட்ட மீனவர்களை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதுகுறித்து மீன்வளத்துறை மற்றும் மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ராமேஸ்வரம் தீவு மீனவர்கள் மத்தியில் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Rameswaram ,Bagh Strait ,Indian maritime border ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...