- சென்னை சங்கமம் 2026' கலைத் திருவிழா
- சென்னை
- திமுக
- பிரதி பொது செயலாளர்
- திமுக குழு
- ஜனாதிபதி கனிமோஜி
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- அல்வார்பேட்டை, சென்னை
- சென்னை சங்கமம் 2026
- தமிழ் திருநாலியர்
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான கனிமொழி நேரில் சந்தித்து, தமிழர் திருநாளையொட்டி நாளை தொடங்கவிருக்கும் ‘சென்னை சங்கமம் 2026’ கலைவிழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.
சென்னையில், தை மாதம் தொடக்கத்தில் தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவின்போது, ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ என்ற மாபெரும் கலைவிழா கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான கலைநிகழ்ச்சிகள் இன்று (14ம் தேதி) மாலை 6 மணிக்கு, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொ டங்கி வைக்க உள்ளார்.
