×

எம்.ஜி.ஆர் 109வது பிறந்த நாளான 17ம் தேதி எடப்பாடி மாலை அணிவித்து மரியாதை; அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு

சென்னை: எம்.ஜி.ஆர் 109வது பிறந்த நாளான 17ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.அதிமுக தலைமை கழகம் இன்று வெளியிட்ட அறிவிப்பு: அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். 109வது பிறந்த நாளான 17ம் தேதி(சனிக் கிழமை) காலை 10.30 மணிக்கு, சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள, எம்.ஜி.ஆர். திருஉருவச் சிலைக்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, கட்சி கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்க உள்ளார்.

அதனை தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், கட்சியினர் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அதே போல், வரும் 17ம் தேதி கட்சியினர் அனைவரும், தங்கள் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். திருஉருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்தும்; திருஉருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.

அதிமுக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 17ம் தேதி எம்.ஜி.ஆர். திருஉருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்தும்; ஆங்காங்கே எம்.ஜி.ஆர். திருஉருவப் படங்களை வைத்து மாலை அணிவித்தும், மரியாதை செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : M. G. ,Eadapadi ,Supreme Leader Board ,Chennai ,M. G. EDAPPADI PALANISAMI ,RAYAPETTA, CHENNAI ,RS ,Adimuga Chief Corporation ,Adimuga Institute ,President ,M. G. R. Born ,
× RELATED அதிமுக-பாஜக கூட்டணியில் இணைய அமமுக...