×

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண தூதரக ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Tags : Sri Lanka Navy ,Chief Minister ,MLA K. Stalin ,Chennai ,Minister of State for Foreign Affairs ,Jaisankar ,K. Stalin ,Tamil Nadu ,Ramanathapuram District ,
× RELATED சென்னை எழும்பூர்-தென்காசி இடையே...