×

நீடாமங்கலம் மாணவர்களிடையே நெகிழி பயன்பாடு விழிப்புணர்வு

*மஞ்சள் பை வழங்கிய தலைமையாசிரியர்

நீடாமங்கலம் : நீடாமங்கலம் பள்ளியில் விவேகானந்தர் பிறந்தநாளில் மாணவர்களுக்கு மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.சுவாமி விவேகானந்தரின் 164வது பிறந்தநாள் நீடாமங்கலம் அரசு உதவிபெறும் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் தேவிலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் விவேகானந்தர் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கூறிய அறிவுரைகளின் தொகுப்புரைகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.

மேலும் மாசில்லா போகி பண்டிகை கொண்டாடும் விதமாக கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும் போது வீட்டிலிருந்து மஞ்சள் துணிப்பை எடுத்து செல்லவேண்டும், நெகிழி பைகளில் வாங்கும் சூழல் ஏற்பட்டால் அதை சேகரித்து பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் போது பள்ளியின் சுற்றுச்சூழல் அமைப்பிடம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் பேரூராட்சி பணியாளர்களிடம் மறுசுழற்சி பணிகளுக்கு வழங்குவார்கள் என்று கூறி மஞ்சள் பை பயன்பாட்டின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு செய்ததோடு, மாணவர்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டது. முன்னதாக ஆசிரியை சிங்கார கஸ்தூரிபாய் வரவேற்றார். ஆசிரியை கல்பனா நன்றி கூறினார்.

17. குளிக்கரை கிராமத்தில் சேறும் சகதியுமான சாலையை விரைவில் சீரமைக்க கோரிக்கை

திருவாரூர் : திருவாரூர் அருகே குளிக்கரை கிராமத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் பெருந்தருக்குடி ஊராட்சிக்குட்பட்ட குளிக்கரை கிராமமானது திருவாரூர்-மன்னார்குடி மாநில நெடுஞ்சாலையில் உள்ளது.

இந்த கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இந்த கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஜல் ஜீவன் திட்டம், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய குடிநீர் திட்டங்களுக்காக குழாய் பதிக்கும் பணிகளுக்காக கடந்த ஓராண்டிற்கும் மேலாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த பணிகள் காரணமாக சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளன. தற்போது மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் இந்த சாலை சேரும் சகதியுமாக மாறி மக்கள் நடமாட முடியாதபடி உள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், வயதானவர்களும், பொதுமக்கள், இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்து வருவதால் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Needamangalam ,Headmaster ,Vivekananda ,Swami Vivekananda ,Deviletshmi ,Needamangalam Government ,Lakshmee Vilas Middle School ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரூரில் கயிறு, பானை விற்பனைக்கு குவிப்பு