- பாலக்காடு காங்
- சட்டமன்ற உறுப்பினர்
- ராகுல் மங்கூட்
- திருவனந்தபுரம்
- ராகுல் மங்கோட்டம்
- பாலக்காடு தொகுதி காங்க
- மாநில இளைஞர்களின்
- பதானாம்திதா
திருவனந்தபுரம்: பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் ராகுல் மாங்கூட்டத்தில். இவர் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். இவர் மீது 2 பெண்கள் பாலியல் பலாத்கார புகார்களை போலீசில் கொடுத்துள்ளனர். இந்நிலையில் இந்நிலையில் 3வதாக பத்தனம்திட்டாவை சேர்ந்த ஒரு இளம்பெண் திருமணம் செய்வதாக ஏமாற்றி ராகுல் மாங்கூட்டத்தில் தன்னை பலாத்காரம் செய்து ஏமாற்றியதாகவும், இப்போது, மாங்கூட்டத் தில் மூலம் தனக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் குற்றப்பிரிவு போலீசார் பாலக்காட்டில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்த ராகுல் மாங்கூட்டத்திலை அதிரடியாக கைது செய்தனர். அதன்பின் போலீசார் அவரை விசாரணைக்காக பத்தனம்திட்டா ஆயுதப்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் தனிப்படை எஸ்பி பூங்குழலி தலைமையில் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் போலீசார் பத்தனம்திட்டா மாவட்ட மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ராகுல் மாங்கூட்டத்திலை போலீசார் மாவேலிக்கரை கிளை சிறையில் அடைத்தனர்.
ராகுல் மாங்கூட்டத்திலை போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும் போதும், மாஜிஸ்திரேட்டின் வீட்டிற்கும், அதன் பின்னர் சிறைக்கு கொண்டு செல்லும் போதும் கம்யூனிஸ்ட் மற்றும் பாஜ கட்சியினர் திரண்டு வந்து போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ராகுலால் பாதிக்கப்பட்ட மேலும் பல பெண்கள் உள்ளனர்: நடிகை ரினி ஆன் ஜார்ஜ் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராகுல் மாங்கூட்டத்தில் மீது மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் தான் முதலில் புகார் கூறினார். இந்நிலையில் நடிகை ரினி ஆன் ஜார்ஜ் கூறியது: ராகுல் மாங்கூட்டத்திலால் பாதிக்கப்பட்ட மேலும் பல பெண்கள் உள்ளனர். இவர்களும் புகார் கொடுக்க தைரியமாக முன்வர வேண்டும். பெண்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை கேட்டுத் தான் பெற வேண்டும். இது போன்ற ஆட்கள் எம்எல்ஏ பதவியில் தொடர வேண்டுமா என்பதை பொதுமக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
எம்எல்ஏ பதவி பறிக்கப்படுமா?
கேரள சட்டப்பேரவை சபாநாயகர் ஷம்சீர் கூறியது: ராகுல் மாங்கூட்டத்தில் ஒரு நிரந்தர குற்றவாளி என்று போலீசார் ரிமாண்ட் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இவர் மீது 3 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமா என்பது குறித்து சட்டப்பேரவையில் முடிவெடுக்கப்படும் என்றார்.
