×

மது அருந்தவும் கூடாது அயோத்தி ராமர் கோயிலை சுற்றி 15 கி.மீ அசைவ உணவுக்கு தடை

அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலைச் சுற்றியுள்ள 15 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் அசைவ உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய அயோத்தி நிர்வாகம் தடை விதித்துள்ளது. அயோத்தியில் உள்ள சில ஹோட்டல்கள் மற்றும் ஹோட்டல் போன்ற தங்கும் விடுதிகள் விருந்தினர்களுக்கு அசைவ உணவு மற்றும் மதுபானங்களை வழங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘பஞ்ச்கோசி பரிக்ரமா’ என குறிக்கப்பட்ட பகுதிகளில் ஆன்லைன் உணவு விநியோக தளங்கள் மூலம் அசைவப் பொருட்கள் விநியோகிக்கப்படுவது குறித்து தொடர் புகார்கள் வந்ததையடுத்து அயோத்தி மற்றும் பைசாபாத்தை இணைக்கும் 15 கிலோமீட்டர் நீளமுள்ள ராம் பாதையில் மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

அயோத்தி மாநகராட்சி கடந்த ஆண்டு மே மாதம் எடுத்த முடிவுக்குப் பிறகும், இந்த ஒன்பது மாதங்களில் மதுபான விற்பனைக்கான தடை பெரிய அளவில் அமல்படுத்தப்படவில்லை. அந்தப் பாதையில் இருபதுக்கும் மேற்பட்ட கடைகளில் மதுபானம் விற்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து 15 கிமீ சுற்றளவில் ஆன்லைன் அசைவ உணவு விநியோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஓட்டல்கள், கடைக்காரர்கள் மற்றும் விநியோக நிறுவனங்களுக்கு இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Ayodhya Ram Temple ,Ayodhya ,
× RELATED பருந்துகளுக்கு 1270 கிலோ போன்லெஸ் சிக்கனை வீச டெல்லி அரசு திட்டம்!