மதுரை: மதுரை திருமங்கலம் பூ மார்கெட்டில் இன்று மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.7000 ஆக விற்பனை ஆகிறது. பொங்கல் பண்டிகையை ஒட்டி ஒரு கிராம் தங்கம் விலைக்கு நிகராக ஒரு கிலோ மல்லிகைப் பூ விலை உயர வாய்ப்பு என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பனிபொழிவு, வரத்து குறைவு காரணமாக வரும் நாட்களில் இன்னும் விலை அதிகரிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
