சாமி கும்பிட சென்ற விவசாயி பைக் திருட்டு

திருவள்ளூர், ஜன.9: திருவள்ளூர் அடுத்து பேரம்பாக்கம், நாயுடு தெருவை சேர்ந்தவர் விவசாயி நந்தன் (71). இவர், நேற்று முன்தினம் தனது பைக்கில் பேரம்பாக்கம் பெருமாள் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது, கோயிலுக்கு எதிரே பைக்கை நிறுத்திவிட்டு சாமி கும்பிட உள்ளே சென்றவர், சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது பைக் திருடுபோய் இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர், பல இடங்களில் தேடியும் பைக் கிடைக்காததால், இதுகுறித்து மப்பேடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், பைக் திருடுபோன சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: