×

ரூ.40 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் துவக்கம்

கோவை, ஜன. 7: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டு பொம்மிசெட்டி பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாதாள சாக்கடை கால்வாய் பணி மற்றும் கெம்பட்டி காலனி பாளையன் தோட்டம் ஹவுசிங் யூனிட் பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் துவக்கவிழா நேற்று நடந்தது.

இந்த பணிகளை மாநகராட்சி சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், உதவி பொறியாளர் நாகேந்திரன், சுகாதார ஆய்வாளர் தனபால், தீர்மானக்குழு உறுப்பினர் பி.நாச்சிமுத்து, கெம்பட்டிகாலனி பகுதி திமுக செயலாளர் முருகேசன், வார்டு செயலாளர் தங்கவேலன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

 

Tags : Goa ,Govai Municipality Central Zone 80th Ward Bommissetti ,Work ,Kempatty Colony Countryside Garden Housing Unit Area ,
× RELATED புற்றுநோய் ஆராய்ச்சியில் கேஎம்சிஎச் மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்