- கோயம்புத்தூர்
- கோயம்புத்தூர் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம்
- பொள்ளாச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம்
- ஆனைமலை தாலுகா ஒடையகுளம்...
கோவை, ஜன. 6:கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பொள்ளாச்சி வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு இணைந்து சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, இந்த முகாம் மற்றும் மரம் நடும் விழா ஆனைமலை தாலுகா ஒடையகுளம் மாகாளியம்மன் – மாரியம்மன் கோயில் ஏரிக்கரை பகுதியில் நடந்தது. இதனை கோவை மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பொள்ளாச்சி சார்பு நீதிபதி மணிகண்டன் வரவேற்றார். கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர் சங்கேத் பல்வந்த் வாகே சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாமின் அவசியம் குறித்து விளக்கினார். மேலும் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் இணைந்து நடப்பட்ட மரங்களின் விவரம் குறித்தும் எடுத்துரைத்தார். தொடர்ந்து, ஒடையகுளம் மாகாளியம்மன் – மாரியம்மன் கோயில் ஏரிக்கரை பகுதியில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டது. விழா முடிவில், கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி ரமேஷ் நன்றியுரை ஆற்றினார்.
