×

திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது: காங்கிரஸ் தேசிய செயலாளர் பேட்டி

 

பொன்னேரி: காங்கிரஸ்-திமுக கூட்டணி பலமாக உள்ளது என பொன்னேரியில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய செயலாளர் சுராஜ் ஹெக்டே கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தல் குறித்து பொன்னேரி தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் தலைமை வகித்தார். கூட்டத்தில், காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய பொறுப்பாளர் சுராஜ் ஹெக்டே, கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி ஜனநாயக வழியில் செல்கிறது. உள்துறை அமைச்சருக்கு பல்வேறு பணிகள் உள்ளன. தேர்தல் எங்கெல்லாம் நடக்க உள்ளதோ அங்கெல்லாம் சென்று தொந்தரவு அளிப்பது, பிரித்தாளும் வகையில் கருத்துக்களை தெரிவிப்பது அமித்ஷாவின் செயலாக உள்ளது. காங்கிரஸ் கட்சி தவெகவை காதலிப்பதாகவும், திமுகவை திருமணம் செய்துகொண்டதாகவும் நாஞ்சில் சம்பத் கூறிய கேள்விக்கு, காங்கிரஸ் நாட்டு மக்கள் அனைவரையும் நேசிக்கிறது.

அவர் அவ்வாறு நினைத்தால் நினைத்து கொள்ளட்டும். காங்கிரஸ் வேறு யாருடனும் கூட்டணி குறித்து பேசவில்லை. காங்கிரஸ்-திமுக கூட்டணி பலமாக உள்ளது. கூட்டணியில் பல்வேறு கட்சிகள் அங்கம் வகிக்கும் நிலையில், உயர் மட்டக் குழு கூடி பேச்சுவார்த்தை நடத்தி காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : DIMUK-CONGRESS ALLIANCE ,NATIONAL SECRETARY OF CONGRESS ,BONNERI ,CONGRESS NATIONAL SECRETARY ,SURAJ ,HECDE ,CONGRESS ,CONGRESS-DIMUKA ALLIANCE ,Bonneri Constituency ,
× RELATED மத உணர்வுகளைத் தூண்டி குளிர்காய யார்,...