- அஇஅதிமுக
- பாஜக
- லாவணிகச்சேரி
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
- திருத்துறைப்பூண்டி
- மாநில செயலாளர்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம்
- சண்முகம்
- அமித் ஷா
- புதுக்கோட்டை
- தேஜா கூட்டணி அரசு
- 2026 சட்டமன்றத் தேர்தல்
- எடப்பாடி பழனிசாமி…
திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் நேற்று அளித்த பேட்டி: புதுக்கோட்டையில் அமித்ஷா பேசுகின்ற பொழுது 2026 சட்டமன்ற தேர்தலில் தேஜ கூட்டணி ஆட்சி அமையும் என்று அறிவித்திருக்கிறார். அதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த லாவணிக்கச்சேரி என்பது பல மாதங்களாக தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. முதலில் 2 பேரும் சேர்ந்து அமைக்கப்படுவது கூட்டணி ஆட்சியா? அதிமுகவின் தனித்து ஆட்சியா? என்கிற பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். 1960களுக்கு பின்னர் திமுகவாக இருந்தாலும், அதிமுகவாக இருந்தாலும் தனித்து ஆட்சி என்பதுதான் வரலாறாக இருந்திருக்கிறது.
ஆனால் இப்போது பாஜ, தமிழகத்தின் உள்ளே புகுந்து அதிமுகவை கைப்பற்றிக்கொண்டு, அவர்கள் தைரியமாக கூட்டணி ஆட்சிதான் என்று அறிவித்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் தனித்து ஆட்சி அமைக்கப்படும் என்பதற்கான அறிவிப்பை எடப்பாடி கூறுகிறார். தனித்தா, கூட்டணி ஆட்சியா என்று இரண்டு பேருமே முடிவுக்கு வராத நிலையில் எப்படி சேர்ந்து தேர்தலை சந்திப்பார்கள். அதிமுக, தவெக அணிக்கு இதுவரை எந்த கட்சியும் போய் சேரவில்லை. சீமான் நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு என மாத்தி பேசுவார். எனவே அவருடைய பேச்சை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தனிப் பெரும்பான்மையுடன் திமுக தான் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
