×

பிறந்தநாளையொட்டி முதல்வரிடம் கனிமொழி வாழ்த்து

சென்னை: நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி பிறந்த நாளையொட்டி, அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழிக்கு இன்று (நேற்று) பிறந்த நாள். பிறந்த நாளையொட்டி, சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கனிமொழி வாழ்த்து பெற்றார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். துர்கா ஸ்டாலினும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

முன்னதாக அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் கனிமொழி மரியாதை செலுத்தினார். கனிமொழியை அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள இல்லத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு உள்ளிட்டோரும் கனிமொழியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

* ‘நாடாளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை மொழி’
கனிமொழி எம்.பி. பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பெண்ணுரிமைக்காகவும் தமிழ்நாட்டின் தன்னுரிமைக்காவும் நாடாளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை மொழி, என் பாசத்திற்குரிய தங்கை, திமுக துணை பொதுச்செயலாளர், நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Chennai ,Chairman of the Parliamentary Committee ,Kanimozhi ,Parliament ,K. Stalin ,Dimuka Phatraman ,Chittaranjan Road ,Chennai Alvarpet ,
× RELATED கடந்த தேர்தலில் 40 சீட், 400 கோடி ரூபாய்...