சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் பேரூராட்சியில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கான சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டி நேற்று நடைபெற்றது.
அண்ணா சீரணி கலையரங்க மைதானத்தில் நடந்த விளையாட்டு போட்டியை பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன் துவக்கி வைத்தார். விழாவில் பேரூராட்சிகளின் இணை இயக்குனர் மனோரஞ்சிதம், கண்ணம்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார், மோப்பிரிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் கோவிந்தராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கோலப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, பலூன் ஊதும் போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன் சில்வர் வாட்டர் கேன் பரிசாக வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், துணைத் தலைவர் சோலை கணேசன், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
