சின்னமனூர் அருகே ரூ.2 கோடியில் சாலை விரிவாக்க பணி தீவிரம்: மழைநீர் கால்வாயும் சீரமைப்பு

 

சின்னமனூர்: சின்னமனூர் அருகே மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் மழைநீர் செல்லும் முக்கிய கால்வாயும் தடுப்பு சுவர் அமைத்து, தூர்வாரி சீரமைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சீப்பாலகோட்டை மாநில நெடுஞ்சாலையில் ஓடைப்பட்டி, வெங்கடாசலபுரம் பகுதியில் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்துவரும் நிலையில், குறுகிய சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. அவ்வப்போது விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன. தமிழகம் முழுவதும் இதுபோன்ற குறுகிய மாநில நெடுஞ் சாலை களில் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி, மேற்கூறிய நெடுஞ்சாலை 12 மீட்டர் அளவில் ஏற்கனவே விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், அதை மேலும் 3 மீட்டர் அளவுக்கு இருபுறமும் விரிவாக்கம் செய்யும் பணி துவங்கி வேகமாக நடந்து வரு கிறது. மேலும், ஓடைப்பட்டியில் இருந்து சீப்பாலக்கோட்டை பகுதிக்கு செல்லும் மழைநீர் கால்வாய் தடுப்பு சுவர் இல்லாமல் இருந்தது. மழை காலங்களில் கால்வாயில் பெருக்கெடுக்கும் வெள்ளம் சாலை வழியாகவும் கடந்து தோட்டப் பகுதிகளில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த கால்வாயில் குறுகிய பாலமும் உள்ளது. தற்போது இக்கால்வாயும் விரிவுபடுத்தப்பட்டு தடுப்புகள் சுவர் பணி முடிவடைந்துவிட்டது. கால்வாயை தூர்வாரி ஆழப்படுத்தி நீண்ட தடுப்பு சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

இனி மழை காலங்களில் கால்வாயில் தடையின்றி மழைநீர் கடந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். ஓடைப்பட்டி பிரிவில் இருந்து தேனி – சின்னமனூர் வழியாக வெங்கடாசலபுரம் வரை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு இருபுறமும் சாலை விரிவாக்கம் பணி நிறைவடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: