நவரத்ன குருமா

தேவையான பொருட்கள்

வறுத்து அரைக்க :
1டேபிள் ஸ்பூன் எண்ணெய்
1டேபிள் ஸ்பூன் நெய்
200 கிராம் பெரிய வெங்காயம் சதுரமாக கட் செய்தது
150 கிராம் தக்காளி கட் செய்தது
1பட்டை(1 இன்ச் அளவு)
4 இலவங்கம்
1 கருப்பு ஏலக்காய்
2 ஏலக்காய்
1அன்னாசிப்பூ
1பிரிஞ்சி இலை
15 பாதாம் தோலுரித்தது
1பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
1இன்ச் அளவு இஞ்சி பொடியாக நறுக்கியது
8பல் பூண்டு பொடியாக நறுக்கியது
1டீஸ்பூன் தனியாத்தூள்
1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
2டீஸ்பூன் மிளகாய் தூள்
தேவையானஅளவு உப்பு
1டீஸ்பூன் கசூரிமேத்தி
4டேபிள் ஸ்பூன் கெட்டியான தயிர்
1டீஸ்பூன் எண்ணெய்
2டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
2டீஸ்பூன்பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு
50 கிராம் கேரட் சதுரமாக கட் செய்தது
50 கிராம் உருளைக்கிழங்கு தோல் சீவி சதுரமாக கட் செய்தது
50 கிராம் பீன்ஸ் 1இன்ச் அளவு கட் செய்தது
50 கிராம் பச்சைப்பட்டாணி
100கிராம் பனீர் சதுரமாக கட் செய்தது
1டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
சிறிதளவுஉப்பு
1 டீஸ்பூன் கசூரிமேத்தி
4டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை
4டேபிள் ஸ்பூன் ஃப்ரெஷ் க்ரீம்
1/2 டீஸ்பூன் சீரகம்

செய்முறை

வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் மசாலா பொருட்கள் சேர்த்து வதக்கவும்.அதில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.இதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தயிர் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் 200மிலி தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும்.ஆறவிட்டு அரைத்து வடிகட்டி வைக்கவும்.ஒரு வாணலியில் எண்ணை, வெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் சீரகம் சேர்த்து இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.பின்னர் பனீர் தவிர அனைத்து காய்களையும் சேர்த்து நன்கு வதக்கவும் சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்.பாதியளவு வெந்ததும் வடிகட்டி வைத்த மசாலாவை ஊற்றி மிளகாய் தூள் சேர்த்து வேக விடவும். தீ சிம்மில் வைக்கவும். மூடி வைக்கவும்.காய்கள் வெந்ததும் பனீர் சேர்த்து, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து கலந்து விடவும். கசூரிமேத்தி, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். சப்பாத்தி, அனைத்து வகையான ரொட்டி, ஜூரா ரைஸ் அனைத்திற்கும் ஏற்ற சைட் டிஷ்.